இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; ஆகஸ்ட் 17ஆம் தேதி தேர்தல்

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கிறார்.225 இடங்களைக் கொண்ட நாடாளு மன்றம் ஏப்ரல் மாதம் வரை செயல்படலாம். இந்தக் கலைப்பின் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான கூட்டு அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்பட்டார். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply