ராஜித்தவின் கருத்து என்னையும் மதத்தையும் அவமதிக்கும் செயல்

ஜனா­தி­பதி கதி­ரைக்கு ஆசைப்­பட்டு நான் மதத்­தை­தக்­கூட மாற்றிக் கொள்வேன் என அமைச்சர் ராஜித்த சேனா­ரத்ன கூறிய கருத்து என்­னையும், நான் பின்­பற்றும் மதத்­தையும் மக்­க­ளையும் அவ­ம­திக்கும் செயல் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தி­னூ டாக ஏற்­பட்­டுள்ள அர­சியல் நில­வரம் எனும் தலைப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஏற்­பாடு செய்­தி­ருந்த விசேட செய்­தி­யாளர் மாநாடு நேற்று பத்­த­ர­முல்லை வோட்­டர்ஸ்ஏஜ் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், அமைச்­ச­ர­வையில் எமது குரல்கள் அடக்­கப்­ப­டு­கின்­றன என்று நான் பாரா­ளு­மன்­றத்தில் கூறிய கருத்தை அமைச்சர் ராஜித்த சேனா­ரத்ன தன்னைச் சுற்றி பேசி­ய­தாக கருத்திற் கொண்டு செய்­தி­யாளர் மாநாட்டில் என்­னைப்­பற்றி மிக ஆவே­ச­மாக கூறி­யி­ருந்தார். என்­றாலும் அமைச்­சரின் கூற்றுக் குறித்து நான் அலட்­டிக்­கொள்­ள­வில்லை. அர­சி­யலில் இவ்­வாறு ஆளுக்காள் குறை­கூறிக் கொள்­வது வழ­மை­யாகும்.

இருந்­த­போதும் ஜனா­தி­பதி கதிரை எனக்கு கிடைப்­ப­தாக இருந்தால் நான் மதத்­தைக்­கூட மாற்றிக் கொள்­ளலாம் என அவர் கூறி­யி­ருப்­பது என்­னையும் நான் பின்­பற்றும் மதத்­தையும் எனது மக்­க­ளையும் அவ­ம­திக்கும் வகையில் இருப்­ப­தை­யிட்டு நான் கவ­லைப்­ப­டு­கின்றேன்.

மேலும் அமைச்­ச­ரவை பேச்­சாளர் என்ற அந்­தஸ்த்தில் இருக்­கின்ற ஒருவர் இவ்­வ­ளவு தூரம் பொறுப்­பு­ணர்ச்­சி­யில்­லாமல் ஆவே­சப்­ப­டு­வது பொருத்­த­மில்­லா­த­தாகும். இதற்கு முன்பும் இவர் முன்னுக்குப்பின் முரனாக பேசி பொறுப்பில்லாத அமைச்சராக இருப்பதுடன் அமைச்சரவையின் பேச்சாளர் என்ற அந்தஸ்தையும் இழந்து வருகின்றார் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply