தத்து எடுத்து வளர்த்த மகளை தந்தை திருமணம் செய்யலாம்: ஈரானில் புதிய சட்டம்

ஈரானில் குழந்தைகள் திருமணம் பெருமளவில் நடக்கிறது. கடந்த 2010–ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 42 ஆயிரம் பேருக்கு திருமணம் நடந்துள்ளது. தலைநகர் தெக்ரானில் மட்டும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 75 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவை வெளியில் தெரிந்த தகவல் ஆகும். ஆனால் வெளியே தெரியாமல் மறைமுக திருமணங்கள் நடைபெறுகின்றன.

எனவே, குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் தத்தெடுத்து வளர்க்கும் மகளை வளர்ப்பு தந்தையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பிரிவும் உள்ளது.

ஆனால் அந்த பெண் அவரை விட 13 வயது குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆதரவாக எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர்.

எனவே அந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும் ஈரானில் பாதுகாவலர் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கவுன்சிலில் மத குருக்கள் நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply