இரண்டு நாளில் ஒரு வீடு கட்டும் ரோபோ
வீடுகளை கட்டித் தரும் அதி நவீன ரோபோவை ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்க் பிவாக் என்ற பொறியாளர் வடிவமைத்துள்ளார். ட்ரியன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபா குறித்து அவர் சொல்லும் போது மனிதர்களுக்கு உதவக்கூடிய வகையில் எத்தனையோ ரோபாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது நான் உருவாக்கியிருக்கும் இந்த ரோபா ஒரு மணி நேரத்தில் 1000 செங்கற்களை அடுக்கி வீடு கட்டும் பணி மேற்கொள்கிறது. பொதுவாக மனிதர்கள் வீடுகளை கட்டி முடிக்க குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் வரையும் அதற்கு கூடுதலாகவும் ஆகலாம். ஆனால் இந்த ரோபோ 2 நாளில் ஒரு வீட்டை கட்டி முடித்து விடும்.
அந்த வகையில் இந்த ரோபோ ஆண்டுக்கு 150 வீடுகளை கட்டும் திறன் படைத்தது என பொறியாளர் மார்க் பிவாக் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இந்த ரோபோ மேற்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் விரைவில் இது உலக அளவில் விற்பனைக்கு வரும் எனவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply