ஒரே கொள்கைக்காகவே இரு கட்சிகளும் தேர்தலில் போட்டி

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாட்டிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் இரு அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்டாலும் அடுத்த ஆட்சியில் நிலையானதொரு தேசிய அரசாங்கத்தை அமைத்து மக்களுக்காகப் பணியாற்றுவதுடன் நாட்டையும் அபிவிருத்தி செய்வது எனும் ஒரே நோக்கத்திலான கொள்கையுடனேயே களத்தில் குதிக்கவுள்ளன. இவ்விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளிலுமே தேசிய அரசாங் கத்தை விரும்பாத மற்றும் தமது கட்சி தனித்தே ஆட்சி அமைக்க வேண்டும் எனும் கருத்துக்கள் கொண்ட சிலர் இருக் கலாம். ஆனால் அவர்களைப் பெரிதாக கருத்திற் கொள்ளாது தேசிய அரசாங்கம், நாட்டு நலன்களுக்கு முதலிடம், அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை, இனங்களிடையேயான ஐக்கியம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இருதரப்பும் செயற்படவுள்ளது.

இதனடிப்படையிலேயே இவ்விரு பிரதான கட்சிகளும் தமக்கு ஆதரவு வழங் கும் ஏனைய சிறு சிறு கட்சிகளுடனும், சிறுபான்மைக் கட்சிகளுடனும் கூட்டு வைத்துத் தேர்தலில் போட்டியிடவுள்ளன. இவ்விடயத்தை முன்னி றுத்தியே இரு கட்சிகளிலும் தேர்தல் கூட்டுத் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன. இவ்விடயங்களை ஏற்றுக்கொண்டு தம்முடன் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய கட்சிகளுடனேயே தாம் கூட்டணி அமைக்க வுள்ளதாகவும் இரு பிரதான கட்சிகளும் அறிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply