முதலாளியின் துண்டித்த தலையுடன் செல்பி எடுத்த தீவிரவாதி: பிரான்ஸ் தாக்குதலில் புதிய தகவல்

பிரான்ஸ் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி தன்னுடைய முதலாளியின் துண்டித்த தலையுடன் செல்பி எடுத்து அதை வாட்ஸ் அப்பில் மற்றொருவருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியான் நகர் அருகே செயின்ட்-குவென்டின்-பல்லேவியரில் உள்ள எரிவாயு தொழிற்சாலை ஒன்றில் கடந்த வெள்ளிகிழமை அன்று காலை 10 மணிக்கு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொழிற்சாலை முதலாளியின் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இது தவிர மேலும் இருவர் காயமடைந்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தொழிற்சாலையில் வேலை செய்த யாசின் ஷாகில் என்பவரை கைது செய்தனர். அவரது கையில் ஐ.எஸ். கொடி வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் யாசின் ஷாகில் முதலாளியின் தலையை துண்டித்து அதனுடன் செல்பி எடுத்த போட்டோ வாட்ஸ் அப்பில் வட அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply