விம்பிள்டன் மைதானத்திற்கு மேல் ஆளில்லா விமானம் பறந்ததால் பரபரப்பு

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் இன்று விம்பிள்டன் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு மேல் ஆளில்லா விமானம் பறந்ததால் போலீசார் அதை பறிமுதல் செய்தனர். மேலும், பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். விம்பிள்டன் மைதானத்திற்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்தில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று பறக்க விடப்பட்டது. இந்த விமானம் விம்பிள்டன் மைதானததிற்கு மேல் பறந்ததை கண்ட போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அந்த பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி போலீஸ் அதிகாரிகள் மிரட்டும் விதமாக இந்த விமானம் பறக்க விடப்படவில்லை என்பதை தெரிந்து கொண்ட பின்னர் நிம்மதி அடைந்தனர்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது ‘‘விம்பிள்டன் டென்னிஸ் வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது எங்களது கடமை. மேலும், கடந்த இரண்டு நாட்களுக்குள் குவைத், பிரான்ஸ், துனிசியா ஆகிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடந்ததால் நாடு முழுவதும் அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளது’’ என்ற தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply