தேர்தல் கூட்டு யாருடன்? மத்திய குழுவில் தீர்மானம்

பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டி யிடுவது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவுடன் கலந்து ரையாடி பின் தெரி விக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் அரசி யல் துறை தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் புதிய அலுவலகத்தை நேற்று (28) உத்தி யோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஆகியோர் அழைப்பு விடுத்திருக்கின்ற போதிலும் எதிர்வரும் 1ம் திகதி மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடிய பின் அதன் பிறகு உத்தியோகபூர்வ தீர்மானத்தை தெரிவிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மலையக மக்களுக்கு மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் தங்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் இணைந்து தான் தேர்தலில் வெற்றி பெற செய்வதற்கு அவர் செயற்படவுள்ளார்.

அத்தோடு ஏற்கனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். முதன் முறை யாக மலையக மக்கள் முன்னணியின் சார்பில் நான் தற்போது போட்டியிட வுள்ளேன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த பாராளுமன்ற தேர்தலின் பின் இலங்கையில் உள்ள 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளார். இதில் ஐம்பதாயிரம் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply