தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணையாளர் இன்று சந்திப்பு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராய முடிவு

பொதுத் தேர்தல்ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காகத் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று சகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரை சந்திக்கிறார். தேர்தல் ஆணையாளருக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு 2ஆம் திகதி (வியாழக்கிழமை) இடம்பெற இருப்பதாக தேர்தல் திணைக் களம் தெரிவித்தது. பாராளுமன்றம் கடந்த வாரம் கலைக்கப்பட்ட நிலையில் ஜுலை 6 முதல் 13ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு ஓகஸ்ட் 17அம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள், மற்றும் தேர்தல் ஒழுங்குகள் குறித்து சகலதேர்தல் அதிகாரிகளையும் அறிவூட்ட தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களை பெறவும் இவற்றின் பிரச்சினைகளை முன்வைக்கவும் 2ஆம் திகதி கட்சித் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் ஆணையாளர் சந்திக்கிறார். இதேவேளை, தேர்தலுக்கானகட்டுப் பணம்தாக்கல் செய்யும்நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. மாவட்ட செயலகங் களிலும் பிரதான தேர்தல் வலுவலகத்திலும் கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply