சிரியாவில் இரு பெண்களின் தலைகளை துண்டித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்
மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக சிரியாவில் இரு பெண்களின் தலைகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் துண்டித்துள்ளனர். சிரியாவின் டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தில், மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக இரு பெண்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றினர். மேலும், அவர்களது கணவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனை சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இதுவரை சுமார் 3,000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply