மஹிந்த இல்லையென்றால் 100 பேர் வெளியேறுவோம் : டிலான் எச்சரிக்கை

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக்­கா­விடின் கட்­சியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் பலர் வெளி­யேறுவதற்கு தீர்­மானித்துள்­ளதாக சுதந்திரக் கட்சியின் உறுப்­பினரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரி­வித்தார். மஹிந்­தவை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பிர­தமர் வேட்­பாளர் தொடர்பில் கடும் சிக்கல் நிலைமை ஏற்­பட்­டி­ருக்கும் நிலையில் கட்­சியின் தீர்­மானம் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க நாம் தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுத்து வரு­கின்றோம். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியை பல­மான கட்­சி­யாக ஒன்­றி­ணைத்து மீண்டும் ஜன­நா­யக ஆட்­சியை கட்­டி­யெ­ழுப்ப நாம் போராடி வரு­கின்றோம்.

ஆனால் கட்­சியில் ஒரு சிலர் தமது தனிப்­பட பழி­வாங்­கலை மட்­டுமே செய்து வரு­கின்­றனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை ஆட்­சியில் இருந்து வீழ்த்­தி­யதும் இன்றும் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­பதும் குறிப்­பிட்ட ஒரு சில­ரே­யாகும்.

அவர்­க­ளுக்­காக கட்­சியை சீர­ழிக்க அனு­ம­திக்­கக்­கூ­டாது. இம்­முறை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி தகு­தி­யான ஒரு­வரை பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும். இந்த விட­யத்தை தொடர்ச்­சி­யாக நாம் ஜனா­தி­ப­தி­யி­டமும் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளி­டமும் தெரி­வித்து வந்­துள்ளோம். ஆகவே இப்­போது ஜனா­தி­பதி சரி­யான முடி­வினை எடுக்க வேண்டும் .

மேலும் ஜனா­தி­பதி நிய­மித்­துள்ள ஆறு பேர் கொண்ட குழு­வும் எமது அறிக்­கையில் மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும் என்­ப­தையே பரிந்­து­ரைத்­துளளது. எமது அறிக்­கை­யா­னது கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளி­னதும் விருப்­ப­துக்­க­மை­யவே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே கட்­சியின் ஒட்­டு­மொத்த தீர்­மா­னத்­தையும் ஜனா­தி­பதி கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்தி மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் முன்னணியின் பல­மான ஆட்­சியை உரு­வாக்­கு­வதே எமது ஒரே எதிர்­பார்ப்­பாகும்.

நாட்டில் மோச­மான சம்­ப­வங்கள் இந்த சில மாதங்­களில் நடந்­தே­றி­யுள்­ளன. வடக்கில் மிகவும் மோச­மான சம்­ப­வங்­க­ளுக்கு மக்கள் முகம் கொடுக்க நேர்ந்­துள்­ளது. நாட்டின் தேசியப் பாது­காப்பில் மீண்டும் சிக்கல் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே இவை அனைத்­தையும் மீண்டும் சரி­செய்ய வேண்டும்.

எனவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் சார்பில் மஹிந்­தவை கள­மி­றக்க வேண்டும். இல்­லையேல் ஐக்­கிய மாக்கள் சுதந்­திர முன்னணியின் முன்னாள் எம்.பி.க்கள் 100 பேர் கட்­சியில் இருந்து விலகி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் கூட்­ட­ணியில் இணைய தீர்­மா­னித்­துள்ளோம். கட்­சியை ஒன்­றி­ணைப்­பது முக்­கி­ய­மா­னதே. ஆனால் அதை விடவும் நாட்டை பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். எனவே மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவந்து நாட்டை கட்டியெழுப்ப நாம் தயாராக உள்ளோம். கட்சியில் இணக்கப்பாடு எட்டப்படாவிடின் மாற்று முடிவுகளை எடுக்க வேண்டிவரும் எனவும் அவர் குறிபிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply