மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் ரணில் .விடுதலைப்புலிகளை போதைப்பொருளுடன் ஒப்பிடுவது சரிதானா
சர்வதேச போதைப்பொருள் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் நடந்த நிகழ்வொன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க “விடுதலைப்புலிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும்” . “விடுதலைப்புலிகளை விடவும் போதைப்பொருள் ஆபத்தானது” எனவும் .கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.விடுதலைப்புலிகளை நேருக்கு நேர் போர்க்களத்தில் சந்திக்க வலுவில்லாமல் இருந்த முன்னைய ரணில் அரசாங்கம் பேச்சு வார்த்தை என்ற மாய வலையினை விரித்து வழமையான தனது நரித்தந்திரத்தினால் விடுதலைப்புலிகளை பலமிழக்க செய்ய முனைந்ததுடன் தமிழ் மக்களின் நண்பன்போல் தன்னைக்காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளை கேவலப்படுத்தி பேசிவருகின்றமையினை மகள் புரிந்துகொள்ளவேண்டும் .
உலகத்திலேயே எந்தவிதமான போதைப்பொருள் பாவனையும்ற போராளிகளை கொண்ட ஒரே போராட்ட இயக்கமாக விடுதலைப்புலிகள் விளன்கியத்துடன் அவர்களது காலத்தில் தமிழ் பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை எங்குமில்லாதவாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பதனை யாரும் மறுத்துவிட முடியாது இவ்வாறான போதைப்பொருளுக்கு முற்றிலும் எதிரான ஒரு அமைப்பினை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்வில் போதைப்பொருளுடன் ஒப்பிட்டு பேசுவதை எந்தஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான் சரி பிழைகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை கேவலப்படுத்தி சிங்கள இனவாத வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் இவரின் தலைமையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் தமிழ் பிரதிநிதிகள் தங்களது இருப்பை மறு பரிசீலனை செய்துகொள்ள வேண்டும் அதேவேளை தமிழ்மக்களும் இவர்களது இரட்டை வேடத்தினை புரிந்துகொள்ளவேண்டும் எதிரியாக இருந்தாலும் அவர்களிடம் உள்ள நட்பன்புகளை மதிக்க தெரிந்தவன்தான் உண்மையான தலைவனாகவும் வழிகாட்டியாகவும் இருக்க முடியும் அதைவிடுத்து வாக்குகளுக்காக யாரை வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் கொச்சைப்படுத்தலாம் என நினைக்கும் இவர்களும் விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் வசைபாடும் ரிஷாத் பதுதீன் போன்ற சில முஸ்லிம் தலைவர்களும் இனியாவது தமிழ் மக்களின் போராட்ட இயக்கங்களை விற்று பிழைப்பு நடத்தும் வேலையை விடுத்து உங்களது சமுக பிரச்சனைகளை பேசி அரசியல் நடத்த பழகிக்கொள்ளுங்கள். அதேநேரம் தமிழ் மக்களும் இவ்வாறானவர்களை முற்றாக புறக்கணிக்க வேண்டுவதோடு இவர்களுக்கு ஒத்தூதும் தமிழர்களும் திருந்துவதற்கு முயற்சிசெய்தால் அது நீங்கள் தமிழினத்துக்கு செய்யும் பெரிய நன்மையாக இருக்கும் .
நன்றி
செயலாளர் நாயகம்
ஸ்ரீ ரெலோ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply