ஜனாதிபதி மைத்ரிபால தலைமையில் நல்லாட்சி பலப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ஷ மீண்டும் வீட்டிற்கு செல்ல வேண்டும்: கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன

தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கில் செயற்பட்டு வருவதாகவும் பல, சந்தர்ப்பங்களில் புலிக்கொடிகளை உயர்த்தி வந்துள்ளரெனவும் மகிந்த ராஜபக்ஷ ஃபாசிச கும்பல்கள் பிதற்றித் திரிகின்றன. எவ்வாறாயினும, ;பொலிஸ் மற்றும்  பாதுகாப்பு தரப்பினரால் இது நிராகரிக்கப்பட்டதும் மகிந்த ராஜபக்ஷ ஆதரவு  சக்திகள் மௌனித்து விட்டனர். ஆயதப்படைகள் வட பகுதியில் வீதிகளில் நடமாடித்திரியவில்லை என்பதை அங்கு செல்பவர்கள் யாரும் காணமுடியும். அங்கே சிவில் நிர்வாகம் நடைபெறுகின்ற அதே வேளை பொலிசாரினாலேயே சட்டம் ஒழுங்கு பேணப்பட்டுவருகிறது.

ஆயுதப் படையினர் முகாம்கள் தோறும்; தங்கியிருக்கும் அதேவேளை, அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் சொந்தக்காரர்களிடம கையளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இன்று கூட ஏராளமான விவசாயக்காணிகள் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் முடக்கிக் கிடக்கின்றன. ஆயினும,; அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.தே.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய காபிர் ஹாசிம், புதிய அரசாங்கம் ஒரு படை முகாமையாவது இது வரை அகற்றவில்லை என்று கூறியுள்ளார். எவ்வாறாயிகும,; சிவில் நிர்வாகிகளாலேயே நிர்வாகம் நடத்தப்பட்டு வருகின்றது. படையினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தமக்கு மேலதிகமாக தேவைப்படும் ஏதாவது காணி தவிர, இதுவரை தம்வசமிருந்த காணிகள் மக்களிடம் மீள அளிக்கப்பட வேண்டும், பொதுவாக, பாதுகாப்பு படையினர் எல்லா பகுதிகளிலும் செயற்பட வேண்டும என்பதை ஒருவரும் எதிர்க்கவில்லை. சாதாரண நிலைமைகளில் கூட, பாதுகாப்பு படையினர் முகாம்களில் ஒதுங்கியிருக்க வேண்டுமாயினும் எல்லா மாவட்டங்களிலும் அவர்களது பிரசன்னம் தேவை என்பது ஏற்புடையதாகும். உண்மையில,; வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட, பாதுகாப்பு படையினர் வீதிகளிலும் சோதனைச் சாவடிகளிலுமிருந்து அகற்றப்படுவதோடு, சட்டம் மற்றும் ;ஒழுங்கு  பொலிசாரால் பேணப்பட வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். சகஜநிலையின் கீழ் வடக்கில் பாதுகாப்பு படையினரது பிரசன்னத்தை குறைப்பதும், தடுத்துவகை;கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்வதும் மேலும் இத்தகைய பல நடவடிக்கைகளை மேற்கொள்வதும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழிசமைக்கும,; யுத்தம் முற்றுப் பெற்று 6 வருடங்கள் கடந்து விட்டன என்பது இச்சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மற்றும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லா விடுதலைப்புலி சந்தே நபர்கள் மீதும் வழக்குள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாலும் கூட, அவர்களை; அரசியல கைதிகளாகக் கருதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேணடும் விடுதலைப்புலிகள் என முன்பு சந்தேகிக்கப்பட்ட 11,000 பேரை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூட, 2011 ல் விடுதலை செய்திருந்தது. அது நிச்சயமாக சரியான நடவடிக்கையாக காணப்பட்டது. அத்தோடு, முன்னாள் அரசாங்கம் வடமாகாணத்திலிருந்து 59 இராணுவ முகாம்களை மூடிவிட்டது. ஆனால் சந்தர்ப்பவாத சூழ்ச்சி  காரணங்களுக்காகவே ராஜபக்ஷ அரசாங்கம் இராணுவ இறுக்கத்தைத் தளர்த்தி, அரசியல் கைதிகளை விடுதலை செய்திருந்தது. அந்த வகையில், அந்த அரசாங்கத்தில்  (அரசியல் மயப்பட்ட ) பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ 2012 ல் கொழும்பில் இடம் பெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் பின்வருமாறு கூறிவைத்தமை உற்று நோக்கத்கதாகும். “ 2010 ஒக்டோபர் முதல் 2011 நவம்பர் வரை பலாலி படைத்தளத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்ப்டிருந்த பிரதேசத்தில் அதிகளவு பகுதி விடுவிக்கப்பட்டது” அவர் மேலும் கூறியதாவது, “அங்கே (வடக்கு கிழக்கில்) ஏறத்தாழ 2000 சோதனைச்சாவடிகள், காவல் நிலையங்கள் மற்றும் தடைவலயங்கள் இருந்தன.  2013ல் அங்கு  இவற்றில் ஒன்றுமே இருக்க வில்லை. வடக்கில் இருந்த 28 பட்டாலியன்கள் (battalions) தெற்குக்கும் கிழக்குக்கும் நகர்த்த்ப்பட்டள்ளன”.

மேலும்,  அரசியல் காரணங்களுக்காகவும்; ராஜபக்ஷவின் அரசாங்கம் பாதுகாப்பு மையங்களை நீக்கியிருந்தது. எனவே, மகிந்த ராஜபக்ஷவின் இன்றைய பிரசார யுக்தியானது சதிநோக்கங்கொண்டு, தமிழ் பிரிவினை மாயை ஒன்றினை உருவாக்குவதற்கானதாகும். அவ்வாறாக, மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் அச்சமானது இனங்களுக்கிடையில் குரோதங்களை வளரச்செய்து, 1983 கறுப்பு  ஜூலை, மற்றும் அண்மைக்காலத்தில் அலுத்கம, பேருவலை பகுதிகளில் இடம் பெற்ற சோகமான சம்பவங்களை மீண்டும் ;கட்டவிழ்த்து விடலாமென அவர் எதிர்பாக்கின்றார்.  இத்தகைய குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரிக்கும் அதே வேளை, தமிழ் பிரிவினை வாதம் மற்றும் ஏனைய குற்றச் சாட்டுகளை முன்வைக்கின்றார். இன்றைய  அரசாங்த்தின் கேள்விக்குறியான சட்ட ப+ர்வத்தன்மை, வாக்குறுதிகளை புறந்தள்ளியுள்ளமை, காத்திரமற்ற ஆணைக்கு அப்பாலும் இன்றைய சிறுபான்மை அரசாங்கம் செல்கின்றது என்பனவே அவர் முன்வைத்துள்ள சில குற்றச் சாட்டுக்களாகும். மாறாக, மைத்ரிபால – ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்த மிகச ;சத்pவாய்ந்த மக்கள் ஆணையானது இக்குற்றச் சாட்டுக்களை தள்ளுபடி செய்துள்ளது. இன்றைய அரசாங்கத்திற்கெதிராக கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைகள் முதலியன தவிடுபொடியாக்கப்பட்டுள்ள நிலையில,; இனவாதம் மற்றும் சிறுபான்மையினர் ஒதுக்கல் குரோதங்களே எஞ்சியுள்ளன.

“நாட்டுப்பற்றாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இப்போது புலிக் கொடிகள் உயர்த்;தப்படுகின்றன. வடக்கிலிருந்து ”எனது அரசாங்கம் 59 படை முகாம் களை அகற்றிய பின்னர் கூட இன்றைய அரசாங்கத்திலுள்ள சில பிரிவினர் படு மோசமான பயங்கர வாதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று  வற்புறுத்துகின்றனர். இந்த நாட்டை பற்றி எரிய செய்யும் நோக்கோடு எரிக் சொல்ஹெய்ம் போன்ற போலியான சமாதான தூதுவர்கள் பிரிவினை நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வந்தனர்”  என்று மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், அவர் விகாரை  விகாரையாகச் சென்று பயங்கரவாதம் மீண்டும் ;தலை தூக்கியதோடு, நாடு பிளவுண்டு பிரிவினையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஆவேசமாகப் பிரசாரம் செய்து வருகின்றார். மாறாக, உண்மையில், சிறுபான்மை இனங்களுக்கெதிராக நிச்சயமாக பேரினவாதம் மற்றும் இனவாத அட:டூளியங்கள் கட்டவிழ்த்து  விட்டதன் காரணமாகவே நாடு பிளவு பட்டுப் போகும் அபாயம் தேன்றியது, தான் ஒரு பௌத்தர் என்று அவர் பறைசாற்றித்திரி;ந் தாராயினும,; தொன்மையான அனைத்து பௌத்த விழுமியங்களையும் காற்றில் பறக்கவிட்டார். அத்தோடு அவர் வேதாளத்தையே என்றும் முருங்கையில ஏற்றி வைத்திருந்த வண்ணம், ;மக்களுக்கு தாங்கொணா வேதனைகளை அள்ளி வழங்கி வந்தார். இவர் தான் எதிர் வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கவுள்ளாரென இவரது ஃபாசிச அமைப்பு பறைசாற்றி வந்துள்ளது. இது ஜனவரி  8 எழுச்சியில் பங்கு பற்றிய பரந்து பட்ட தீவரவாத சக்திகளுக்கு அதிர்ச்சியளித்தது. தொழிற்சங்கங்கள், மக்கள் மன்றங்கள் முதலியன அதனை ஒரு காட்டிக் கொடுப்பாக இனங்கண்டு குரல் எழுப்பின. ஏவ்வாறாயினும் பின்பு நிலைமை மகிந்தவுக்கு எதிராக மாற்றம் அடைந்து விட்டது.

எதிர்வரும் தேர்தலில்  மகிந்த ராஜபக்ஷவுக்கு எதுவித சலுகையும் வழங்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்ரிபால திட்டவட்டமாக அறிவித் விட்டார் என அண்மையில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக களமிறங்கவோ, தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுதற்கோ, ஸ்ரீ.ல.சு.க. ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கோ இடமளிக்கப்பட மாட்டாதென மைத்ரிக்கும் மகிந்தவுக்கும் இடையில் சமரசம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட 6 அங்கத்தவர்கள் குழுவுக்கு அறிவித்து விட்டார். முன்னாள் அரசாங்த்தின் கொள்கைகளையும் அதன் ஆட்சியின் அவலட்சணத்தையும் மக்கள் நிச்சயமாக நிராகரித்து விட்டனர்.  எனவே, நிராகரிக்கப்பட்ட அரசியல்  வாதிகளையும் அவர்களது கொள்கைகளையும் மீள அரியாசனமேற்றுவதானது மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து அவரது தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகொடுத்த மக்களை இழிவு படுத்தும் கைங்கரியமாகும்.

“ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் நல்லாட்சி தொடரவேண்டுமா, அல்லது நாட்டைக் கொள்ளையடித்துச் சூறையாடிய ராஜபக்ஷ ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதா என்பதே எதிர்வரும் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டியதாகும். மேலும் ;பொது மக்களது செல்வத்தை  அபகரித்த போக்கிரிகளுக்கு தண்டனை வழங்குவதா, அல்லது அவர்கள் தப்பிச் சென்று மீண்டும் ஊழல், சட்டத்தின் வீழ்ச்சி மற்றும் காடைத்தனத்தை  உண்டாக்குவதற்கு அனுமதிப்பதா என்பதுமே மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானமாகும்”. என்று அமைச்சர் சேனாரத்ன மீண்டும் வலியுறுத்தினார். எனவே அவர்களது பிரயத்னத்தின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றி நாம் பெரிதும் விழிப்பாயிருக்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply