தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியில் களமிறங்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசப்பற் றுள்ள தேசிய முன்னணி என்ற கட்சியில் பிரதமர் வேட் பாளராக களமிறங்கவுள்ளதாக நம்பகரமாக தெரிய வருகின்றது. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி என்ற இந்தக் கட்சியின் பெயரை ஸ்ரீலங்கா தேசிய சக்தி என்று பெயர் மாற்றி தேர்தல் திணைக்களத்தில் மஹிந்த தரப்பினர் பதிவு செய்துள்ளதாக தெரிகின்றது. இந்தக் கட்சியின் செயலாளராக பியசிறி விஜயநாயக்க பதவி வகித்து வருகின்றனார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடமிருந்து பிரிந்து சென்று இவர் இந்தக் கட்சியை ஆரம்பித்திருந்தார். பின்னர் தற்போது விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியில் உப தலைவராக அவர் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த விடயம் குறித்து பியசிறி விஜயநாயக்கவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது விமல் வீரவன்சவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மெதமுலனவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிட முடியாத நிலை ஏற்படுமானால் எமது கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply