பக்தாதியை கவிழ்க்க முயற்சி: ஐ.எஸ்.தீவிரவாத தலைவர்கள் 13 பேர் சுட்டுக்கொலை
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ளது. அதன் தலைவராக அபுஅல்–பக்தாதி இருந்து வருகிறார். சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய குண்டு வீச்சில் படுகாயம் அடைந்த அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் புரட்சி நடத்தி அவரை கவிழ்க்க தீவிர சதி திட்டம் நடந்தது.
அதை அறிந்த அந்த இயக்கத்தின் உளவுத்துறை சதியை முறியடித்தது.அதை தொடர்ந்து புரட்சி நடத்தி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட வர்களில் 5 பேர் ஐ.எஸ்.தீவிரவாத இயக்க ராணுவ கமாண்டர்கள் என தெரிய வந்துள்ளது. மற்றவர்கள் தலைவர்கள் ஆவர். இவர்களில் பெரும் பாலானவர்கள் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அரேபியர்கள்.சிரியா, ஏமன், குவைத் நாடுகளை சேர்ந்தவர்கள். மற்றும் ஒரு குர்த் மற்றும் ஒரு செசன்யாவை சேர்ந்தவரும் அடங்குவர். இந்த தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் அரேபிய பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply