துனிசியாவில் அவசரநிலை பிரகடனம் : அதிபர் உத்தரவு

துனிசியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக அந்நாடு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. துனிசியாவின் தலைநகரான துனிஸ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சவ்ஸி கடற்கரை சுற்றுத்தலமாக விளங்கி வருகிறது. கடந்த வாரம் இங்குள்ள  உணவு விடுதி ஒன்றில் திடீரென புகுந்த ஒரு தீவிரவாதி, அங்கு கூடியிருந்த மக்களின் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதில், 38 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்கவும், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தி அந்நாட்டு அதிபர் கைட் எசெப்சி உத்தரவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply