வாக்கெடுப்பில் மேலும் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள கிரீஸ் மக்கள் கடும் எதிர்ப்பு
பொருளாதார நெறுக்கடிநிலையை சமாளிக்கும் வகையில் மேலும் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சிக்கன நடவடிக்கைக்கு கிரீஸ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது. இந்த கூட்டமைப்பில் 1981–ம் ஆண்டு கிரேக்க நாடும் இணைந்தது. இந்த கூட்டமைப்பு நாடுகள் யூரோ நாணயத்தை அறிமுகப்படுத்தியது. தன்நாட்டு பணத்தை கைவிட்டு யூரோ நாணயத்துக்கு மாறியது கிரேக்கத்துக்கு கைகொடுக்கவில்லை.
உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. விவசாயம் நலிந்தது. வருமானம் குறைந்ததால் நாடு நிதி நெருக்கடிக்கு உள்ளானது.
நிதிபற்றாக்குறையில் தவித்த போதும் 2004–ம் ஆண்டு தலைநகர் ஏதென்சில் மிகப் பிரமாண்டமாக ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. வருமானத்துக்கு திண்டாடும் போது கோடிக் கணக்கான ரூபாய் ஒலிம்பிக் போட்டிக்கு செலவழிப்பது தேவைதானா? என்று நாடு முழுவதும் அப்போதே மக்கள் முணு முணுத்தார்கள்.
வருமான பற்றாக்குறையால் தத்தளித்த கிரேக்கத்துக்கு கடன் வழங்க பல நாடுகள் முன் வந்தன. ஐரோப்பிய யூனியன், மத்திய வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றில் வட்டிக்கு கடன் வாங்கினார்கள். மாதம் தோறும் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் தவணைத் தொகையை தவறாமல் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அந்த நாடுகள் கடன் வழங்கியிருந்தது.
சொன்ன சொல் தவறாமல் கிரேக்க நாடும் மாதம் தோறும் தவணை தொகையை திருப்பி செலுத்தி வந்தது. 2008–ம் ஆண்டுக்கு பிறகு அதையும் செலுத்த முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி கடந்த 6 மாதமாக தள்ளாடி கொண்டிருக்கிறது. கிரேக்கம் கரை சேருமா? என்று உலக பொருளாதார நிபுணர்களெல்லாம் கவலையுடன் உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள்.
ஜெர்மனிக்கு 4½ லட்சம் கோடி, பிரான்சுக்கு 3½ லட்சம் கோடி, இத்தாலிக்கு 3 லட்சம் கோடி, ஸ்பெயினுக்கு 2 லட்சம் கோடி. இது தவிர கொசுறு கடன்களாக அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சில லட்சம் கோடி கொடுக்க வேண்டி உள்ளது. பன்னாட்டு நிதியத்துக்கு 1 லட்சத்து 62 ஆயிரம் கோடி, யூரோ மத்திய வங்கிக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் கோடி கடன் பாக்கி உள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது கிரேக்கம் மிகவும் கஷ்டப்பட்டது. அதிரடியாக சில பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. வட்டியை அதிகரித்தல், ஓய்வூதியம், மாத சம்பளத்தை குறைத்தல், வங்கி ஏ.டி.எம்.மில் 30 சதவீதம் இந்த மாதிரி சீர்திருத்தங்களும் கைகொடுக்க வில்லை.
சர்வதேச நிதியத்திடம் வாங்கிய கடனை கடந்த 1–ந்தேதி திருப்பி செலுத்த முடியவில்லை. நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அனைத்து வங்கிகளும், பங்கு சந்தையும் உடனடியாக மூடப்பட்டது. ஏ.டி.எம்.மில் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள்.
கடன் கொடுத்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க சில நடவடிக்கைகளை எடுக்கும்படி கிரேக்கத்துக்கு நிபந்தனை விதித்துள்ளது. இதன்படி சம்பளத்தை வெகுவாக குறைக்க வேண்டும். வரியை உயர்த்த வேண்டும். மானியங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அமுல்படுத்தினால் நெருக்கடி தரமாட்டோம் என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
ஆனால் நாட்டு மக்கள் இந்த நிபந்தனைகளை ஏற்பார்களா? என்பதுதான் கேள்விக்குறி!
இதுபற்றி மக்களிடம் இன்று ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் அலெக்சிஸ்டிப்ரஸ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 61 சதவீத மக்கள் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதனால் கிரீஸ் யூரோ நாணயத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், மேலும் ஐரோப்பிய யுனியனிலிருந்து வெளியேறும் எனக் கூறப்படுகிறது.
கீரிசின் நாட்டு மக்களின் இந்த முடிவு பற்றி ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்று விவாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply