பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்களை குடியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மாத்திரமல்லாது உங்களது பிரதிநிதி என்ற வகையிலும் உங்கள் மீது அக்கறை கொண்டவன் என்ற வகையிலும் உங்களைப் பார்த்து, உங்களுடன் கலந்துரையாடி, உங்களது பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து அவற்றைத் தீர்க்கும் நோக்கத்துடன் நானிங்கு வருகை தந்துள்ளேன் என்றும், நீங்கள் வன்னியில் தங்கியிருந்த காலகட்டத்தில் என்னைப்பற்றியும் இந்த அரசாங்கத்தைப் பற்றியும், அரச படைகள் பற்றியும் கேள்விப் பட்டவை எல்லாம் மிகவும் மாறுபட்ட நிலையில் உள்ளன.
உங்களை வரவேற்று அரவணைப்பில் இருந்து அத்தனை விடயங்களையும் நாம் அவ தானித்து செயற்படுத்தும் விதத்தைக் கண்டு இப்போது நீங்கள் உண்மை நிலையை நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
எனவே உங்களது எதிர்காலம் குறித்து நீங்கள் நம்பிக்கை இழக்கக் கூடாதென்றும் அரச படை என்பது மக்கள் படை என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியா பம்பைமடு யாழ். பல்கலைக் கழகத்தின் விடுதியில் அமையப் பெற்றுள்ள நலன்புரி நிலையத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்து வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நல்லதொரு வாழ்க்கையை நோக்கி நல்லதொரு குறிக்கோளுடன் உங்களை அழை த்துச் செல்லும் நோக்கில் உங்கள் மத்தியில் இருந்து உங்களுடன் கலந்துரையாடி உங்களு க்கான ஒளிமயமான வாழ்க்கை குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் கலந்துரையாடி, ஜனாதி பதியின் மீதும் அரசாங்கத்தின் மீதும் என் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவே நானிங்கு வருகை தந்திருக்கிறேன்.
ஒரு வழிகாட்டியாக உதவி செய்யக் கூடிய வராக நானிங்கு வந்திருப்பதால் உங்களது ஒளிமய மான எதிர்காலம் குறித்து நீங்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
பொய்யான பரப்புரைகளைக் கேட்டு நீங்கள் உங்களது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்ட வடமாகாண விசேட செயலணியின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வன்னிப் பகுதி துப்புரவு செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் சொந்த இடங்களில் மீளக்குடியேறும் நடவடிக்கைகள் ஜனாதிபதி அவர்களின் எண்ணப்படி உங்களது விருப்பங்களுக்கேற்ப வெகுவிரைவில் முன் னெடுக்கப்படும்.
நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ போராளிகள் எனக்கூறி வந்த புலித்தலைமை உங்களை தனது சுயநலத்திற்காக உபயோகித்து வந்துள்ள நிலையில் உங்களை உயிர்ப்பாது காப்புடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி அவர்களுக்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வன்னியில் இருந்தபோதும் நீங்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு உட்பட்டுள்ளதை மனந் திறந்து நீங்கள் வெளிப்படுத்தும் நிலையில் தொடர்ந்து உங்களை துன்ப துயரங்களுக்குள் தள்ளிவிடக் கூடாது என்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு அக்கறையாக உள்ளது என்பதை விளக்கிக் கூறிய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் மக்களாகிய உங்களை இந்த அரசு ஒருபோதம் கைவிட்டு விடாது என உறுதியளித்தார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply