இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் யுத்தம் நீடிக்காது

புலிகளுடனான யுத்தம் இன்னமும் இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்காது என இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பொது மக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 400 மீற்றர் தொலைவில் படையினர் நிலை கொண்டிருப்பதாக தெரிவித்த அந்த உயர் இராணுவ அதிகாரி, பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகள் தப்பிச் செல்லக் கூடிய சகல வழிகளும் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 எனவே, வெகுவிரைவில் புலிகளிடமிருந்து பூரணமாக நிலப்பரப்புக்களை கைப்பற்ற முடியும் என குறித்த உயர் இராணுவ அதிகாரி பிரபல ஆங்கில இணைய தளமொன்றுக்கு செவ்வி அளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply