இந்தியா எப்போதும் எமக்கு பக்கபலமாகவே இருந்து வருகின்றது : சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா

இலங்கை விவகாரத்தில் பல நாடுகள் எம்மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகையில் இந்தியா எமது நடவடிக்கைளை அனுமதித்துள்ளதுடன் மருத்துவ உதவிகள் உட்பட பல வழிகளிலும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிவருகின்றது. எமது பிராந்தியத்திலுள்ள நாடுகளின் ஒத்துழைப்புகளின்றி இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பது சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். அரசியல் நோக்கில் சிலர் இந்தியாவின் உதவியை எதிர்க்கின்றனர் என்று சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.

இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்காக அந்நாட்டுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை தனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது. வடக்கில் புலிகளிடமிருந்து மீக்கப்படும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்துகொடுக்கின்றது. அது அரசாங்கத்தின் தலையாய கடமை என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தியா எப்போதும் எமக்கு பக்கபலமாகவே இருந்துவருகின்றது. வலய நாடுகளின் ஒத்துழைப்புக்கள் இன்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது. இது சர்வதேசம் அதிகார மட்டங்கள் தொடர்பில் தெளிவுள்ளவர்களுக்கு தெரிந்த விடயமாகும். இந்தியாவின் உதவியை மக்கள் விடுதலை முன்னணி விமர்சிக்கின்றது. இன்று (மார். 17) காலை மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினருக்கு பாராளுமன்றத்தில் நான் இதற்கு பதிலளித்தேன். இந்த உதவிகள் மூலம் எந்தவிதமான சர்ச்சைகளும் ஏற்படபோவதில்லை. ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பலமடைகின்றன. இந்தியாவின் மருத்துவ உதவி மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு வெளிக்காட்டப்பட்டுள்ளது. அத்தியாவசியமான உதவியே வழங்கப்பட்டுள்ளது. அர்த்தப்பூர்வமான ஒத்துழைப்புக்கள் இந்தியாவினால் வழங்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூகவியல் பிராந்திய அமைச்சர்களின் மாநாடு கடந்த இரண்டு தினங்களாக கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை மாநாடு நிறைவுற்றதையடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply