துருக்கியில் குண்டுவெடிப்பு:குறைந்தது 28 பேர் உயிரிழப்பு

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சுரூக் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று துருக்கிய உள்துறை அமைச்சகம் கூறுகிறது. குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதியில் உடல்கள் சிதறி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் காட்டுகின்றன.

அந்தப் பகுதியில் இருந்த கலாச்சார மையம் ஒன்றின் பூங்காவிலேயே இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது.

அங்கு நூற்றுக்கணக்கான இளம் துருக்கியர்களும், குர்துகளும் சந்தித்து சிரிய நாட்டிலுள்ள நகரான கொபானியை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் குழுவின் தீவிரவாதிகளே நடத்தியிருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

கொபானி நகரை சிரியா மற்றும் குர்து படைகள் கூட்டாக முன்னெடுத்தத் தாக்குதலில் அந்நகரை, இஸ்லாமிய அரசு அமைப்பு இழந்திருந்தது.

அதற்கு பழிவாக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply