அண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்
அண்டவெளியில் அறிவுள்ள ஜீவராசிகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை செலவழிக்கவுள்ளதாக பெருங்கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார். முழு பால்வெளிக்கு அப்பாலிலுள்ள இதர பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள ஜீவராசிகளைத் தேடும் முயற்சித் திட்டம் ரஷ்யக் பெருங்கோடீஸ்வரரான யூரி மில்நெரால் முன்னெடுக்கப்படவுள்ளது.
வானொலி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கான அறிமுக நிகழ்வு லண்டலிலுள்ள ராயல் சொசைட்டியில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவெளியிலுள்ள வேற்றுகிரகங்களைச் சேர்ந்த அறிவுகூர்ந்த ஜீவன்கள் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
பூமியில் வாழ்பவர்கள் மட்டுமே அறிவுஜீவிகளா அல்லது அதற்கு வெளியேயும் அறிவால் மேம்பட்ட ஜீவன்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நேரம் இப்போது வந்துள்ளது எனவும் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply