தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: கருணாநிதி உறுதி
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், இலவச திட்டங்களை வழங்குவதில் முன்னோடி மாநிலம் என்று பெயர் எடுத்த தமிழகத்தில் அதிகரித்து வரும் மது விற்பனை கடும் விவாதப்பொருளாக மாறி உள்ளது. மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி அரசுக்கு வருவாய் அதிகரித்து வரும் அதேசமயம், அளவுக்கு அதிகமாக மது குடித்து உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்து வருவது வேதனைக்குரிய விஷயம்.
எனவே, மது விலக்கு தொடர்பாக அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. மதுவிலக்கு கொள்கையை தொடர்ந்து முன்னிறுத்தி வரும் பா.ம.க., தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மற்ற கட்சிகளும் மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து வரும் நிலையில், பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. இதுவரை தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இல்லாததால் ஏழை, எளியவர்கள் மது அருந்தி உயிரிழக்கின்றனர். இந்த மதுப் பழக்கத்திற்கு ஆண்கள் மட்டுமின்றி தாய்மார்கள், குழந்தைகளும் உயிரிழக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்துவது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. எனவே, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திறகும் ஏற்றத்திற்கும் வழி வகுக்க மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply