போக்கோ ஹராம் தீவிரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் : ஜான் கெர்ரி

போக்கோ ஹராம் தீவிரவாதிகளை ஒழிப்பதில் நைஜீரியாவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நைஜீரிய அதிபர் புகாரி வந்துள்ளார். இப்பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியையும் புகாரி சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் கெர்ரி, நைஜீரியா நாட்டுடன் பொருளாதாரம், பிராந்திய விவகாரங்கள் உள்பட பல்வேறு விஷயங்களில் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

குறிப்பாக போக்கோ ஹராம் தீவிரவாதிகளை ஒழிப்பதில் இரு நாடுகளும் மிக இணக்கமாகப் பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply