மயிரிழையில் பெரும் விபத்திலிருந்து தப்பிய லுப்தான்சா விமானம்

போலந்து நாட்டின் வார்சா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போது மயிரிழையில் பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது லுப்தான்சா விமானம். ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா எம்ப்ரேர் இ.ஆர்.ஜே. -195 என்ற விமானம் போலந்து நாட்டின் வார்சா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்குவதற்காக வானிலிருந்து இறங்கிவந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஆளில்லா விமானம் ஒன்று அந்த விமானத்திற்கு எதிரே, வெறும் 100 மீட்டர் தொலைவில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் இரண்டு விமானங்களும் மோதும் நிலை ஏற்பட்டது. ஆனால் லுப்தான்சா விமானத்தின் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்தார்.

பின்னர் இது பற்றி அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். தற்போது அந்த ஆளில்லா விமானம் பற்றி விசாரனை நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply