ஜனாதிபதிக்கு பிடித்தவரை பிரதமராக நியமிக்க முடியாது
ஜனாதிபதியே பிரதமரை நியமிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், ஜனாதிபதிக்கு பிடித்தவரை பிரதமராக நியமிக்க முடியாது. ஜனாதிபதியானாலும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மஹிந்தவால் உயிர்பெற்ற நபர்களில் ரணில் விக்கிரமசிங்க முக்கியமானவர். தனது குடும்பத்துக்கு ஒட்சிசன் கொடுக்கவே மஹிந்த மீண்டும் வருவதாக ரணில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த வேளையில் மஹிந்தவே ரணிலுக்கு ஒட்சி சன் கொடுத்தார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நடத்தப் பட்ட செய்தியாளர் சந்திப்பு நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்க்கட்சியாக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் உரிமை கள் மற்றும் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் பேசினார்கள். ஆனால் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களின் வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து தமது ஆட்சியை தக்கவைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர். ஆனால் நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கை யில் கடந்த காலத்தில் கொல்லப் பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை களை மேற்கொள்வோம்.
மேலும் இன்று மக்களுக்கு காணிகளை கொடுப்பதும் மீள்குடியேற்றங்களை செய்வதுமாக அரசாங்கம் அதிரடி நடவடிக்கை களை மேற்கொள்கின்றது. ஆனால் மக்கள் இவற்றின் பின்னணியை தெரிந்துகொள்ள வேண்டும். இவர் கள் மக்களுக்கு காணிகளை கொடுப் பதாக கோரி வியாபார நிறுவனங்களுக்கும் தனியார் துறையினருக்கும் சர்வதேச நிறுவனங்களுக்குமே காணிகளை கொடுக்கின்றனர். மக்களுக்கு கொடுப்பதாக காட்டி விட்டு அதிகளவிலான நிலங்களில் தனியார் துறையினர் வியாபார நடவடிக்கைகளுக்கே முக்கி யத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அதுமட்டும் இல்லாது ரணில் விக்கிரமசிங்க இன்று மஹிந்தவை விமர்சிக்கின்றார். தனது குடும்பத்துக்கு ஒட்சிசன் கொடுக்கவே மஹிந்த மீண்டும் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த வேளையிலும் ரணிலின் தலைமைப்பதவி பறிபோக நேர்ந்த நிலையிலும் மஹிந்தவே ரணிலுக்கு ஒட்சிசன் கொடுத்தார்.
இன்று வடக்கில் சுதந்திரமாக சென்று தமிழ் மக்களின் வாக்குகளை ரணில் கேட்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்த மஹிந்தேவேயாவார். இன்று நெடுஞ்சாலைகளில் வேகமாக சென்று தேர்தல் பிரசாரங்களை செய்ய முடிந்துள்ளமையும் மஹிந்தவினால் தான் என்பதை ஏற்க வேண்டும். மஹிந்தவினால் உயிர்பெற்ற நபர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரணில் விக்கிரமசிங்கவேயாவார். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களைத் தெரிவுசெய் யும் உரிமையோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நியமிக்கும் உரிமை ரணிலுக்கு இல்லை. அதேபோல் ஜனாதிபதியால் தான் பிரதமர் நியமிக்கப்படுவார் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply