சீனாவுக்கு போட்டியாக இந்தியப் பெருங்கடலில் கடற்படையின் வலிமையைக் காட்ட திட்டமிடும் மோடி அரசு
சீனக் கடற்படையின் ஏவுகணை அழிப்பு நீர்முழ்கி கப்பலான ஜினான், என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பல் சில தினங்களுக்கு முன் மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. முன்னதாக இந்த மாதம் தொடக்கத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீனாவின் நீர்முழ்கி கப்பல் பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் நிறுத்தப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் தவிர, இலங்கை, வங்கதேசம், மாலத் தீவுகள் மற்றும் சோமாலியா ஆகியவற்றின் கடல் எல்லைகளிலும் சீனா தனது கப்பல்களை நிலைநிறுத்தியிருப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் சீனாவுக்கு போட்டியாக இந்தியப் பெருங்கடலில் கடற்படையின் வலிமையைக் காட்ட மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைந்து வருகிற அக்டோபர் மாதம் கடற்படை கூட்டுப் பயிற்சி செய்து இந்தியப் பெருங்கடலில் தனது வலிமையை நிரூபிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ராணுவ மற்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply