யாழினில் தேர்தலை நிறுத்த கோரி வழக்கு!

யாழ்ப்பாணத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதை நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. எமது இலங்கை சுதந்திர முன்னணியின் செயலாளர் எழுத்துமூல மனுவைத்தாக்கல் செய்திருக்கிறார். வேட்பு மனுத்தாக்கல் நிறைவு செய்யப்பட்ட தினத்திற்கு மறுநாளான ஜூலை 14 இல் நாடாளுமன்றத் தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் தங்களுடைய நியமனப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தெரிவத்தாட்சி அதிகாரியால் தமக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள கட்சிச் செயலாளர் சாகர காரியவசம், தமது நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற உத்தரவை நாடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட இரு சுயேட்சை குழுக்கள், நீதிமன்றம் சென்றுள்ளதாக யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் குறிப்பிடுகையில், யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 12 சுயேட்சை குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்திருத்த நிலையில் 6 சுயேட்சை குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இரு சுயேட்சை குழுக்கள் யாழ்.மாவட்டத்தில் தேர்தலுக்கு இடைக்கால தடை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. எனினும் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தாம் அறிந்திருப்பதாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply