கொல்லப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இன் இலங்கை பிரஜை முன்னாள் அதிபர்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இலங்கையரான நிலாம் முஹ்ஸின் என் பவர் இணைந்து போரிட்டு சிரியாவில் வைத்து தாக்குதலில் கொல்லப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடிக் கட்டுப்பாட்டில் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி திஸாநாயக்கவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விஷேட விசாரணைகளிலேயே பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் நபரின் தேசிய அடையாள அட்டை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய பொலிஸ் ஊடக பேச்சாளர், அதன் படி இந்த நபர் கண்டி பிரதேசத்தில் வசித்துவந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் கலேவலை மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேசங்களில் உள்ள இரு சர்வதேச பாடசாலைகளில் அவர் அதிபராகக் கடமையாற்றியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி திஸாநாயக்கவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விஷேட விசாரணைகளில் நேற்று வரை பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறி த்த நபர் சிரியாவில் கொல்லப்பட் டுள்ளமையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த விஷேட விசாரணையானது பல்வேறு கோண ங்களை நோக்கி நகர்த்தப்பட்டுள்ள துடன் சமூக வலைத்தளங்கள் மற் றும் அறிவியல் ரீதியிலான சாதனங்களை ஆராயும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனைவிட கலேவலை மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேசங்களில் உள்ள இரு வேறு சர்வதேச பாடசாலைகளில் இருந்து நிலாம் முஹ்ஸின் தொடர்பிலான தகவல்களை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த நபர் ஐ.எஸ். அமைப்பு டன் தொடர்பு பட்ட விதம், அவர் நாட்டை விட்டு வெளியேறிய விதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமை ப்புடன் தொடர்புடையோர் வேறு எவரேனும் உள்ளனரா போன்ற விடயங்களை உள்ளடக்கி இந்த விரிவான விசாரணைகள் தொடர்கின்றன.
பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுள்ள குறித்த நபர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகக் கடமை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக் கது.
கலேவலை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலையில் குறித்த நபர் அதிபராக கடமையாற்றியமை க்கான எழுத்து மூலசான்று ஆவ ணங்கள் எதனையும் விட்டு வைக் காத நிலையிலேயே அங்கிருந்து சென்றுள்ளதாக குறிப்பிடும் பொலி ஸார் அது தொடர்பில் பாடசாலை உரிமை யாளர், தற்போதைய அதிபர் உள்ளிட்டவர்களிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply