இராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனங்களில் இலக்கத் தகடுகளை மாற்றி பயணிப்பதற்கு முடியும்”
இராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனங்களில் இலக்கத்தகடுகளை மாற்றிக்கொண்டு பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையிலேயே மிரிஹானை பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனத்தின் இலக்கத்தகடு மாற்றப்பட்டுள்ளது. மாறாக அது போலியான இலக்கத்தகடு அல்ல. இதனை அரசியலாக்குவதற்கு எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு எந்த விடயமும் இதில் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச் சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மேஜர் ஜெனரல் பிரசன்ன டி. சில்வா யுத்த காலத்தில் சிறப்பாக செயற்பட்ட திறமையான அதிகாரி. அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருக்கமாக செயற்பட்டவர். எனவே இந்த வெள்ளை வேன் விவகாரத்தினால் கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் உயிர்களுக்கு ஆபத்து என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பாக இந்த விடயத்தில் நாங்களே சந்தேகப்படவேண்டியிருந்தது. எவ்வாறெனினும் தற்போது இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் சி.ஐ.டி. யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடு கையில்,
இம்மாதம் 20 ஆம் திகதி மிரிஹானை பகுதியில் வெள்ளை வேன் ஒன்று பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டபோது அதிலிருந்து இராணுவ வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டதுடன் பிஸ்டல் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் இலக்கத்தகடு மாற்றப்பட்டிருந்துள்ளது. உண்மையான இலக்கத்தகட்டின் இலக்கமானது றா.எச்.ஏ. 59466 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பயன்படுத்தும் வாகனமாகும். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் பிரசன்ன டி. சில்வாவின் பாதுகாப்பு அதிகாரிகள். கைது செய்யப்பட்ட பின்னர் இவை தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளது. புலிகளிடமிருந்து 767 வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அவற்றை விசேட ஏற்பாடுகளின் கீழ் இராணுவத் தி னர் பயன் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
2013 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவே இதற்கான அனுமதியை அளித்துள்ளார். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள வாகனமும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா என்பவர் மிகவும் திறமையான இராணுவ அதிகாரி மாவிலாறு முதல் நந்திக்கடல் வரை இவர் யுத்தத்தை வழி நடத்திச் சென்றவர். யாரிடம் சிக்கினாலும் பிரசன்ன சில்வாவிடம் சிக்கிவிடக்கூடாது என்று ஒரு முறை பிரபாகரனே கூறியுள்ளார். அந்தளவுக்கு திறமையான இராணுவ அதிகாரி.
அது மட்டுமன்றி பிரசன்ன டி. சில்வா முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவுடன் நெருக்கமாக இருந்தவர். 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர் சீனாவுக்கு ஒரு பயிற்சி நெறிக்காக சென்றிருந்தார். தற்போது மிலிட்டரி இணைப்பாளராக கடமையாற்றுகின்றார். இந்நிலையில் இந்த வெள்ளை வேன் விவகாரத்தினால் கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் உயிர்களுக்கு ஆபத்து உள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பாக இந்த விடயத்தில் நாங்களே சந்தேகப்படவேண்டியிருந்தது. எவ்வாறெனினும் தற்போது இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் சி.ஐ.டி. யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர் இதனை அரசியலாக்குவதற்கு முயற்சிக் கின்றனர். அவ்வாறு எந்த விடயமும் இதில் இல்லை. இராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனங்களில் இலக்கத்தகடுகளை மாற்றிக்கொண்டு பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையிலேயே இந்த வாகனத்தின் இலக்கத்தகடு மாற்றப்பட்டுள்ளனர். மாறாக அது போலியான இலக்கத் தகடு அல்ல. இதேவேளை ஐ.எஸ். அமைப்பில் செயற்பட்ட இலங்கையர் குறித்து பேசப்படுகின்றது. இது தொடர்பில் அவரின் குடும்ப உறுப்பினர்களை கைதுசெய்து விசாரரணை நடத்துமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கேள்வி: ராஜபக் ஷக்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு என்ன நடந்தது?
பதில்: அவை விசாரிக்கப்படுகின்றன. நாம் பல சவால்களை எதிர்கொண்டே இவற்றை செய்கின்றோம். ராஜபக் ஷக்களுக்கு எதிராக 7000 குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றில் 52 குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு முடிந்துள்ளன. விளையாட்டு வீரர் தாஜுதீனின் கொலை விவகாரமும் விசாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து விபரங்களையும் வெளியிடு வோம். அரசாங்கம் மாறினாலும் இன்னும் அரச கட்டமைப்பு மாறவில்லை. இன் னும் அதிக இடங்களில் ராஜபக் ஷ நிய மித்த அரசாங்க அதிகாரிகளே உள்ளனர். பல விசாரணைகளுக்கு அரச அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.
கேள்வி: வெள்ளை வேன் விவகாரம் மூல மாக மஹிந்த ராஜபக் ஷவுக்கு உயிர் அச்சு றுத்தல் ஏற்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளாரே?
பதில்: இவை தொடர்பில் சி.ஐ.டி. யினர் விசாரிக்கின்றனர்.
கேள்வி: மஹிந்த ராஜபக் ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக உங்களுக்கு அறிவிக் கப்பட்டுள்ளதா?
பதில்: ஒரு முறைப்பாடு கூட செய்யப் படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply