பாம்ரா நகரத்தை சிரிய கூட்டு படைகள் விரைவில் கைப்பற்றும்

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுபாட்டில் உள்ள பாம்ரா நகரத்தை சிரிய கூட்டு படைகள் விரைவில் கைப்பற்றும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  சிரியாவில் சுமார் 3000 ஆண்டு பழமை வாய்ந்த பாம்ரா நகரத்தை ஐஎஸ் அமைப்பினர் கடந்த மே மாதம் கைப்பற்றினர். அந்த நகரத்தில் இருந்த பல அரிய வகை கலைப்பொருட்களையும் அவர்கள் அழித்தனர். இந்த நிலையில் பாம்ரா நகரத்தை மீண்டும் கைப்பற்ற சிரிய கூட்டு படைகள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளன. விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என கூட்டு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாம்ரா நகரின் 3 கிலோ மீட்டர் சுற்றளவை நெருங்கி விட்டதாக கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர். நகரை கைப்பற்றும் முயற்சியில் பல தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு விட்டதாகவும், விரைவில் பாம்ரா நகர் சிரியாவின் கட்டுபாட்டிற்குள் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்ரா நகரம் மிக முக்கியமான நகரம் என்பதால் அந்நகரை கைப்பற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூட்டுபடையினர் தெரிவித்துள்ளனர்

சிரிய கூட்டு படையினரின் தாக்குதல் தற்போது தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாம்ராவை தொடர்ந்து பல்வேறு முக்கிய நகரங்கள் ஐஎஸ் கட்டுபாட்டிலிருந்து மீட்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply