லூசியானா சினிமா தியேட்டரில் மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி – பலர் படுகாயம்
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் மர்ம மனிதன் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர். இங்குள்ள லபயேட் நகரில் உள்ள ‘கிராண்ட் 16’ திரையரங்கத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு 7.30 மணியளவில் ‘டிரெய்ன் ரெக்’ திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் ஆர்வத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ரசிகர்களில் ஒருவன் திடீரென எழுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான்.
குண்டுகள் பாய்ந்து ரசிகர்களில் பத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம நபரும் குண்டு பாய்ந்து உயிரிழந்தான். காயமடைந்த அனைவரும் லபயேட் நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் லூசியானா மாநில கவர்னரான பாபி ஜிண்டால், கிராண்ட் தியேட்டர் அமைந்துள்ள பகுதிக்கு விரைந்துள்ளார். இது, தனிநபரின் கொலைவெறி தாக்குதலா? அல்லது, திட்டமிட்ட தீவிரவாத தாக்குதலா? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply