இலங்கையின் கொடி எரிக்கப்பட வேண்டும் : வட்டரக்க விஜித தேரர்
இலங்கையின் தேசியக் கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டுமென மஹியங்கனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வட்ரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசியக் கொடி குறித்து அவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். விஜித தேரர், நவ சமசமாஜ கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.
தேசிய கொடியில் 75 வீதமான பகுதி சிங்கள சமூகத்தையே பிரதிபலிக்கின்றது.வாளேந்திய சிங்கமும்,நான்கு வெள்ளரசு இலைகளும்,தேசியக் கொடியின் பெரும் பகுதியில் இடம்பிடித்துள்ளன.
ஏனைய சமூகங்களுக்கு சரியாக இடமளிக்காத இந்த தேசியக் கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply