பாகிஸ்தானில் நிலநடுக்கம்: இஸ்லாமாபாத் குலுங்கியது
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத்தின் வடகிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு சுமார் 26 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது இஸ்லாமாபாத்தின் சில பகுதிகள் குலுங்கியதாக கூறப்படுகிறது. வீடுகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அதிர்வுக்குள்ளாகின. அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என தெரியவருகிறது.
கிழக்கு பஞ்சாப் மாகாணம், வடமேற்கில் உள்ள கைபர் பகதுங்வா, குலாம் ரசூல் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல பகுதிகளில் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தானை ஆட்டிப்படைத்த 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 73 ஆயிரம் பேர் பலியாகினர். சுமார் 35 லட்சம் மக்கள் வீடு, வாசலை இழந்து நிர்கதியாக தவித்தனர். இதேபோல், கடந்த 2013-ம் ஆண்டு நிலநடுக்கத்துக்கு சுமார் 370 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply