சர்வதேச நிறுவனங்களிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவல் : அமைச்சர் கெஹலிய குற்றச்சாட்டு
வடக்கில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி குறித்து ஆராயும் போது சர்வதேச நிறுவனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி இருக்கலாமென்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித ஆணையானர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு இணையத்தளமான தமிழ் நெட் வெளியிட்டிருந்த தகவல்களும் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்பட்டன. இந்த ஒற்றுமை ஒன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிறுவன ஊடுருவலுக்குச் சான்றாகிறது.
இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதும் இந்த முயற்சியை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இந்த வருடம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குப் பின்னர் 2,800 தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் நவநீதன்பிள்ளை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்றது.
இலங்கையில் இயங்கும் ஐ.நா. காரியாலயத்தினூடாக அவர் வடக்கு நிலைமைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டியிருக்கலாம். இதை விடுத்து அவர் புலிகள் சார்பு இணையத்தளமான தமிழ் நெட்டில் தரவுகளைப் பெற்றுள்ளமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இதன் மூலம் அவர் இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவித்துள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் ஐ.நா. அமைப்பின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் முழு உலகமும் ஒன்று திரண்டு ஓரணியில் செயற்படும் இவ்வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை அதிருப்திக்குரிய விடயமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply