நேபாளத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு
நேபாளத்தில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. நேபாளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் மேலும் ஒரு பின்னதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு 4.3 அலகுகளாகப் பதிவானதாக, அந்நாட்டு தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்தது.
இங்கு கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதிலும், இதன் தொடர்ச்சியாக மே மாதம் ஏற்பட்ட மற்றொரு சக்தி வாய்ந்த பின்னதிர்விலும் 8,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளுக்கு மேல் பதிவான 354 நில அதிர்வுகள் அந்தப் பகுதியில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்க்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply