மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு தேர்வில் மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்வரும் நாடுகளில் நரேந்திர மோடி பார்வையிடாத நாடு எது?

அ) அமெரிக்கா, ஆ) ஆஸ்திரேலியா, இ) இங்கிலாந்து, ஈ) தென் கொரியா

கேரளாவின் உயர் நீதிமன்றத்திற்கான உதவியாளர் பணிக்காக நடந்த எழுத்துத் தேர்வில்தான் இந்த சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியைப் பார்த்து தான் ஆச்சர்யமடைந்ததாகவும், பிரதமர் மோடியை சீண்டிப் பார்க்கும் நோக்கம் உள்ளவர்களே தேர்வில் இந்த கேள்வியை வைத்திருக்க வேண்டுமென்றும் இந்த தேர்வில் பங்கேற்ற பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேரள நீதிமன்றம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply