தவறான புகார்களால் போலீசாரை அலையவிடும் இங்கிலாந்து மக்கள்
இங்கிலாந்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டோர்செட் பகுதியில் கையில் ஆயுதம் வைத்திருந்த ஒருவரைப்பற்றி அவசர அழைப்பு மூலம் 999 எண்ணுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இனையடுத்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக அவசர அவசரமாக தகவலளிக்கப்பட்ட முகவரிக்கு போலீசார் படையெடுத்தனர். போலீசார் ஹெலிகாப்டரிலும், நான்கைந்து கார்களிலும் போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். கொடுக்கப்பட்ட முகவரியான ப்ளம்பெர் ஸ்டீவன்(55) என்ற நபரது வீட்டின் உள்ளே சென்று விசாரித்தபோது, அவரது நண்பர் வேய்ன் டோட்(43) என்பவர் ப்ளம்பெரின் தோட்டத்தை சமன் செய்ய உதவினார் என்று தெரியவந்தது.
சமன் செய்ய பயன்படுத்திய ‘ரேக்’ என்று அழைக்கப்படும் ஆயுதத்தை தூரத்திலிருந்து கண்டவர்தான் போலீஸ்காரர்களுக்கு ஆயுத பீதியை கிளப்பிவிட்டுள்ளார் என்பதையறிந்த போலீசார் ஏமார்ந்து போயினர்.
இங்கிலாந்தில் இவ்வாறு நிகழ்வது முதன்முறை அல்ல. கடந்த வாரம்கூட கைத்துப்பாக்கியுடன் ஒரு மர்மநபர் அங்குள்ள பெரிய பாலத்தின் மீது நின்றிருப்பதாக வந்த தகவலின் பேரில் ஹெலிகாப்டரில் சென்ற போலீசார் அங்கே ‘டிட்ஜெரிடூஸ்’ என்று அழைக்கப்படும் காற்றிசைக்கருவிகள் இரண்டை கையில் வைத்திருந்தவரைப் பார்த்து ஏமார்ந்து திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply