உயரம் குறைவான சுரங்கப்பாதையில் சிக்கி சிதைந்த சுற்றுலா பேருந்து: 6 பேர் உயிர் ஊசல்
கல்விச் சுற்றுலாவுக்காக பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்த ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் சுற்றுலா பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓட்டுனர் எதிர்பாராத விதமாக உயரம் குறைந்த சுரங்கப்பாதையில் ஓட்டிச் சென்றார். இதனால் பேருந்தின் மேற்பகுதி சிக்கி சிதைந்தது. தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை பிய்ந்த சப்தத்தில் அலறினர்.
ஐம்பத்தெட்டு பேர் பயணித்த அந்த பேருந்தில் கடைசி இருக்கைகளில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களை ஸ்பெயின் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மும்முரமாக வேலைகளை துவக்கியுள்ளனர்.
ஓட்டுனர் குடித்துவிட்டு இந்த பேருந்தை ஓட்டினாரா என்ற கோணத்தில் போலீசார் முதலில் விசாரணையை துவக்கினர். எனினும், சோதனையில் அவர் போதையில் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஓட்டுனர் இதுவரை ஜி.பி.எஸ். வழங்கும் தகவல்களைப் பின்பற்றியே வாகனம் ஓட்டிவந்திருக்கிறார். எனவே, எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது புதிராகவே உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply