ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில் கிருஷ்ணர் கோயில் தேரோட்டம்
மத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் இங்குள்ள இந்திய வம்சாவளியினர் கிருஷ்ணர் கோயில் தேரோட்டத்தை நடத்தியுள்ளனர். மிசவுரி மாநிலத்திலுள்ள செயின்ட் லூயிஸ் கவுன்ட்டியில் கிருஷ்ண பலராமர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள சிலைகளை இங்குள்ள இந்திய வம்சாவளியினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வைத்து செயின்ட் லூயிஸ் பகுதியில் இருந்து குவீனி பார்க் வரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
இதுநாள் வரை, கிருஷ்ண பலராமர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மட்டும் தரிசித்து வணங்கிய கிருஷ்ணர் சிலைகளை இந்த தேரோட்டத்தின்போது, அனைத்து மக்களும் பார்த்து வணங்கியதாக தேரோட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வழிநெடுக பஜனை பாடல்களுடன் சென்ற தேரோட்டத்தை மிசவுரி மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கண்டுக் களித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply