தனியார்துறை ஊழியர்கள் வாக்களிப்பதற்கு தேவையான விடுமுறையை வழங்கவும் :மஹிந்த தேசப்பிரிய
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு தனியார் துறையினர் தேவையான விடுமுறையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கை ஒன்றிலேயே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொது தேர்தல் ஒன்றுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் வாக்களிப்பானது எமது நாடடில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள அனைவரினதும் கடமை அந்த வகையில் இம்முறை நாடளாவிய ரீதியில் தொழில் நிமித்தமாக வெவ்வேறு நகர பிரதேசங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது வாக்கினை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் எமது நாட்டில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை விடவும் இம்முறை நடைபெறும் தேர்தலில் மக்கள் தேர்தல் சட்டதிட்டத்தின் அடிப்படையில் அதிகளவான வாக்குப் பதிவினை மேற்கொள்ள வைப்பதே எமது நோக்கம்.
அந்தவகையில் இம்முறை நாடளாவிய ரீதியில் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தேர்தல் தினத்தன்று அவர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து 40 கிலோ மீற்றர் அல்லது அதற்கு குறைவான தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் அரைநாள் விடுமுறை வழங்க வேண்டும்.
இதேவேளை 40 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரையான தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் வாக்காளருக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படவேண்டும்.
மேலும் வாக்காளர் பணிபுரியும் இடத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொடக்கம் 150 கிலோமீற்றர் தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் இரண்டு நாள் விடுமுறை வழங்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் தனியார் துறையினருக்கு அறிவித்துள்ளது.
இதனிடையே நாடளாவிய ரீதியிலுள்ள தனியார்த்துறை வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவுசெய்வதற்கு மூன்று நாள் கால அவகாசம் தேவைப்படுமாயின் அதனை வழங்கவேண்டுமெனவும் தேர்த ல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவ்வறிக்கையில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply