இலங்கை மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார் அப்துல் கலாம்

மிகப்பெரும் ஆளுமையும் ஆசா னும் இணையற்ற மானிடப் பிறவியு மான இந்தியாவின் முன்னாள் ஜனாதி பதி கலாநிதி ஏ.பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறை வையிட்டு தான் ஆழ்ந்த கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் மிகப்பெரும் ஆளுமையுள்ளவருடன் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்ததோடு, அவரின் ஆளுமை தன்னில் மிகப்பெரும் தாக்கம் செலுத் தியதை அவரிடமே சொல்லும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் திரண்டிருந்த எமது இளைஞர்களுக்கு மத்தியில் 2020 இல் தென்னாசியா எப்படியிருக்க வேண்டும் என்ற தனது தொலைநோக்கு குறித்து ஒரு நீண்ட விளக்கத்தை அளித்த கலாநிதி கலாமை இலங்கை மக்கள் ஒருபோதும் மறந்திவிடமாட்டார்கள். கலாநிதி கலாம் அவர்கள் எமது மனங் களிலும் நினைவுகளிலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு நீங்காது நிலைத் திருப்பார்.

கலாநிதி கலாம், அவர் விட்டுச்சென்ற எண்ணிலடங்காத சாதனைகளுக்காக மட்டுமன்றி அவர் ஒரு மிகப்பெரும் மானிடப்பிறவி என்பதற்காகவும் அவரது உறுதியான பண்பாடு எளிமை, அன்பு மற்றும் எமது மனங்களை அவர் கவரும் விதம் என்பவற்றுக்காகவும் அவர் என்றும் நினைவுகூறப்படுவார்.

கலாநிதி கலாம் திடநம்பிக்கையுடைய வராகவும் தளராத மனம் படைத்தவராகவும் இருந்தார் என்பதோடு அவர் உலகின் ஒரு மிகப்பெரும் அரசியல் மேதையு மாவார்.

அவரது இழப்பு இந்தியாவுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பாகும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் நான் தனிப்பட்ட வகையிலும் அவரது சகோதரர் மற்றும் ஏனைய நெருங்கிய உறவினர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply