லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியின் மகனுக்கு மரண தண்டனை
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாமுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லிபியாவில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்களை நசுக்கியதாக முன்னாள் சர்வாதிகாரி கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாம், கடாபியின் உளவுத்துறை தலைவராக செயல்பட்ட அப்துல்லா அல்-செனுயுசி, முன்னாள் பிரதமர் பக்தாதி அல்-மஹ்மூதி ஆகியோருக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பு வழங்கப்படும்போது கடாபி மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply