எமது வெற்றி நிச்சயம்; ஐ.தே.கட்சியின் வியூகம் தோல்வி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கே ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார். இதனை நாம் தடுத்து நிறுத்தினோம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க. நூறு நாளுக்கு அரசுக்கு ஆதரவு வழங்கியது. தேர்தலை பின்போட்டுக் கொள்வத ற்கே ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற் றும் போதே, அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் அதிகாரங்களை பறித்து அவையனைத் தையும் ரணில் கையிலெடுத்து ஜனாதிபதியை இந் நாட்டின் கோபல்லவாவாக மாற்ற முயற்சித்தார்.
இதனை நாம் தடு த்து நிறுத்தினோம். ஜனாதிபதியை எமது தலைவரை பாதுகாத் தோம். நிதியமைச்சின் கீழ் இருக்க வேண்டிய மத்திய வங்கியின் நிர்வாகம் ரணிலுக்கு கீழே கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பாரிய பிணை முறி மோசடி மேற்கொள்ளப்பட்டது.
எமது கட்சி பிளவுபட்டு சீரழிந்து தேர்தலில் மாபெரும் தோல்வியை பெறும் என ஐ.தே.கட்சி கனவு கண்டது. மஹிந்தவையும் – மைத்திரியையும் பிரிக்க சதி செய்தது. ஆனால் ஐ.தே.கட்சியின் முயற்சி வெற்றிபெறவில்லை.
இன்று எமது கட்சி ஒன்றுபட்டுள்ளது. மஹிந்தவும் மைத்திரியும் இணைந்துள்ள னர். ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வி கண்டோம். எனவே அத்தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் நாம் தேர்தலுக்கு சென்றால் வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டோம்.
இந்த நிலையில் ஜனாதிபதி எமக்கு அழைப்புவிடுத்தார். அரசுடன் இணையுமாறு தேர்தலை ஒத்திவைப்பதற்கு காலம் தாழ்த்துவதற்கு ஒரே மாற்று வழி இது என்பதை புரிந்து கொண்டு 100 நாள் ஆட்சிக்கு ஆதரவு வழங்கினோம்.
இந்த வியூகம் இன்று வெற்றி பெற்றுள்ளது. எமது கட்சி ஒன்றுபட்டு தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றது. எமது கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக கிடைத்த நிதி கள் எமக்கு கிடைப்பதில்லை.
ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திகள் நின்று போய்விட்டன. இதனால் மக்கள் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைகின்றனர்.இன்று தேர்தலில் வெற்றி பெறும் எந்த விதமான சாதகத் தன்மையும் ஐ.தே.கட்சி க்கு இல்லை. எனவே எமது வெற்றி நிச்ச யம் என்றும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாய க்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply