எகிப்தில் பர்னிச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகேயுள்ள ஒபோயுர் என்ற நகரில் மிகப் பெரிய பர்னிச்சர் தொழிற்சாலை உள்ளது. இங்கு மரசாமான்கள் தயாரிக்கப்படுகிறது.நேற்று இங்கு ஏராள மானவர்கள் பணியில் இருந்தனர். அப்போது அங்கு திடீரென தீப்பிடித்தது. தொடக்கத்தில் தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது.தகவல் அறிந்ததும் 20 தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து வந்தன. பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தும் அந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி பலியானார்கள். 22 பேர் காயம் அடைந்தனர்.இந்த தீவிபத்துக்கு அங்கு ஏற்பட்ட கியாஸ் காரணம் என கூறப்படுகிறது. அந்த தொழிற்சாலையில் அரசின் அனுமதி சான்றிதழோ, பாதுகாப்பு வசதிகளோ இல்லை.எகிப்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அலெக்சாண்ட்ரா நகர மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் காயம் அடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply