மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்: இன்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி
பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவ வகை செய்யும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பர்வீந்தர் பகுதியில் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர் ராச்பால் சிங் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த மாதத்தில் பாகிஸ்தான் நடத்தும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் உள்ள மக்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply