கலாம் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி வந்து சேர்ந்தார்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றியபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், காலை 10 மணியளவில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

இதில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்தில் பல்வேறு தலைவர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளார்.

இதற்கிடையே, கலாம் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து சேர்ந்தார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்திற்கு புறப்பட்டார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் வந்து இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply