புலிகளின் பொலிஸ் நிலையம், வாகனங்கள் பொதுமக்களால் தீ வைத்து எரிப்பு
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள பொது மக்களையும், அவர்களது பிள்ளைகளையும் புலிகள் பலாத்காரமாக தூக்கிச் சென்று படையில் இணைத்துக் கொள்ள முயற்சித்ததை அடுத்து பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாக்குவாதம் பெரும் மோதலில் முடிந்துள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பொலிஸ் நிலையத்தையும், வாகனங்களையும் தீவைத்து நாசப்படுத்தினரென்று புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த பொது மக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
பொது மக்கள் தமது கட்டுப்பாட்டை மீறியதையடுத்து ஆயுதங்களுடன் அங்கு விரைந்த புலிகள் பொது மக்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டும், பாடுகாயமடைந்தும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தை அறிவித்தது. தற்பொழுது பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் புலிகள் ஆக்கிரமித்துள்ளனர்.
புதுமாத்தளன் பிரதேசத்திலுள்ள பொதுமக்களையும், அவர்களது பிள்ளைகளையும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற் காக பலாத்காரமாக தூக்கிச் செல்லும் வகையில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் புலிகள் முயற்சித்துள்ளனர். தங்களது பிள்ளைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள பொதுமக்கள் புலிகளை கேட்டுள்ளனர்.
அந்தப் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறைப் பாடு செய்வதற்காக அந்தப் பிரதேசத்திலுள்ள புலிகளின் பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைந்து ள்ளனர். அங்கிருந்த ஒரு சில புலிகளின் காவல்துறை யினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்று பின்னர் அது கலவரமாக விஸ்வரூபம் எடுத் துள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் புலிகளின் பொலிஸ் நிலையத்தையும், இரண்டு வான் மற்றும் இரண்டு மோட் டார் சைக்கிள்களையும் தீவைத்து நாசப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து ஆயுதங்கள் ஏந்திய சுமார் 60 புலிகள் அந்தப் பிரதேசத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப் படுத்த முயற்சித்துள்ளனர். நிலைமை கட்டுப் பாட்டை இழந்ததையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டுள்ளனர்.
புலிகளின் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர். அந்தப் பிரதேசத்திலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பிரதேசத்திலிருந்து 1565 பொதுமக்கள் காட்டு வழியாகவும், கடல் ஏரி வழியாகவும் தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நேற்று வந்தடைந்துள்ளனர்.
இந்த பொதுமக்களே இந்தச் சம்பவத்தினை விபரித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
தங்களுக்கு உணவு எதுவும் வேண்டாம், எங்களை உடனடியாக விடுவியுங்கள் என்று ஐ. சி. ஆர். சி. பிரதிநிதி களிடம் பொதுமக்கள் வேண்டியதாகவும் அந்தப் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் அறிவித்துள்ள மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில் ஊடுருவியுள்ள புலிகள், படையினருடனான மோதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் சடலங்களை அங்கு அடக்கம் செய்துவிட்டு அவற்றை வீடியோ படம் எடுத்து படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களையே தாம் அடக்கம் செய்வதாக உலகில் பொய்ப் பிரசாரம் செய்யும் முயற்சியொன்றை மேற்கொண்டு வருகின்றனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையாகவே முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் மோதல் தவிர்ப்பு பிரதேசத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
மக்களோடு மக்களாக இங்கு ஊடுருவியுள்ள புலிகள் அங்கு தமது உறுப்பினர்களின் சடலங்களை புதைத்துவிட்டு, அவர்கள் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் என வீடியோக்கள் மூலம் உலகுக்கு பொய்த்தகவல் வழங்குகின்றனர்.
அத்துடன் பொது மக்கள் அமைத்துள்ள குடிசைகளுக்கு மத்தியில் பதுங்கு குழிகளை அமைந்துள்ளனர். மேலும் தமது கனரக ஆயுதங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றையும் இந்த மோதல் தவிர்ப்பு பிரதேசத்திலேயே புலிகள் பதுக்கி வைத்துள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply