இலங்கையில் உணவுப் பஞ்சம் இல்லை: ரோகித்த போகல்லாகம

இலங்கையில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லையெனத் தெரிவித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம, நல்லெண்ண அடிப்படையிலேயே இந்தியா நிவாரணப் பொருள்களை வழங்க முன்வந்திருப்பதாகக் கூறினார்.வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தொடர்ச்சியாக உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், இந்தியாவிடமிருந்த நிவாரணப் பொருள்கள் வாங்குவதால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதாக என எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தியா நிவாரணப் பொருள்களை வழங்க முன்வந்ததாகவும் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ புதுடில்லிக்குச் சென்றிருந்த சமயம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் எந்தவிதமான இரகசிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply