99 வீதம் இராணுவ ரீதியில் வெற்றி பெற்றுள்ளோம் : கெஹலிய
புலிகளை இராணுவ ரீதியில் 99 சத வீதம் தோல்வியடையச் செய்துள்ளதுடன் தற்பொழுது அவர்கள் மரணக்களத்தில் இரு ப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலி ரம்புக் வெல்ல தெரிவித்தார்.பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்பு டன் வெற்றிகரமாக முன்னெடுத்த நடவடி க்கைகள் மூலம் புலிகள் தற்பொழுது 28 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவு படுத்தும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் இடம் பெற்றது. கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறியதாவது:-
வடக்கு, கிழக்கில் பெரும்பாலான பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த புலிகள் தற்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த நடவடிக்கைகள் மூலம் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 99 வீதமான பிரதேசங்களை தற்பொழுது இழந்துள்ளனர்.
படையினருக்கு எதிரான யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள புலிகள் தமது பலத்தையும், வளத்தை இழந்துள்ளதுடன், ஆளணி பற்றாக்குறையையும் எதிர் கொண்டு ள்ளனர். இதனாலேயே புலிகள் தமது பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை பலவந்தமாக படையில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் இந்த நடவடிக்கை தற்பொழுது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அப்பாவி தமிழ் மக்கள் மீது கொடூரமாக நடந்து கொள்ளும் புலிகளின் மீது முற்றாக நம்பிக்கை இழந்த பொது மக்கள் தற்பொழுது அவர்களது பிடியிலிருந்து வேகமாக தப்பி வர ஆரம்பித்துள்ளனர்.
புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை படையினர் வெகு விரைவில் மீட்டெடுத்து விடுவார்கள் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply